Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குடியரசு துணைத் தலைவர் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குடியரசு துணைத் தலைவர் மரியாதை
டெல்லியில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அவரைப் போன்ற மகத்தான வீரர்களின் உயிர்த் தியாகம்தான் இந்தியாவை இன்று வழிநடத்துகிறது.

பகிரவும் WhatsApp Facebook

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் கட்டபொம்மன் படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, தன் வீரத்தையும் நம் மண்ணின் மீது இருக்கிற பாசத்தையும் வெளிப்படுத்திய மகத்தான மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, அஞ்சா நெஞ்சத்துடன், அவர்களுக்கு எதிராக கடும் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், தியாகமும், தன்னுரிமையைப் பாதுகாப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன.
அவரைப் போன்ற மகத்தான வீரர்களின் உயிர்த் தியாகம்தான் இந்தியாவை இன்று வழிநடத்துகிறது. நாட்டை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து...


தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "ஆங்கிலேயே ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்று பாடமாக திகழ்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


முந்தைய செய்தி
கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி
அடுத்த செய்தி
GI tag helps boost Manapparai murukku business

தொடர்புடைய செய்திகள்